Friday, May 18, 2018

மீண்டும் கச்சா எண்ணெய் விலையேற்றம்...ஏன்? 1

எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 80 டாலருக்கு ஏறியுள்ளது. கடந்த மூன்று வருடங்களில் இதுவே அதிகம். மிக முக்கிய காரணம் புவி அரசியல். ஆற்றொழுக்காக போய்கொண்டிருந்த விலையை மீண்டும் அரசியல் பொருளாதார விளையாட்டுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் உலக தலைவர்கள்.

ஈரான் பொருளாதார தடை?

எண்ணெய் விலை ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ள பொருளாதாரத் தடைகள் குறித்த பயம் ஒரு முக்கியமான காரணி. ஈரான் அணுசக்தி உடன்படிக்கை 2015 ல் இருந்து திரும்பப் பெறலாமா என்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒரு முக்கியமான முடிவுக்கு வந்துள்ளார். ஈரான் அணு ஆயுத திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கான எந்த முயற்சியும் 'பெரிய பிரச்சினைகளை' ஏற்படுத்தும் என்று டிரம்ப் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. அச்சுறுத்தல் உண்மையானது. அமெரிக்க ஜனாதிபதியின் சிறு கண்ணசைவே போதும். ஈரான் அணுசக்தி உடன்படிக்கை 'பைத்தியக்காரத்தனம்' என்று ஜனாதிபதி டிரம்ப் குறிப்பிட்டவுடனேயே  எண்ணெய் விலை ஏறத்தொடங்கிவிட்டது. ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை மீண்டும் சுமத்தும் ஒரு முக்கிய படியாக இது தோற்றத்தை தருகிறது. பிண்ணணியில் சவுதி அராபியா உள்ளதாக பொருளாதார நோக்கர்கள் கருதுகிறார்கள். அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம் சவுதி அராம்கோவை இந்த ஆண்டின் பிற்பகுதியில் பட்டியலிட திட்டமிட்டுள்ளதால், அதிக எண்ணெய் விலைக்கு சவுதி பெரும் ஆர்வம் கொண்டுள்ளது. இயற்கையாகவே, ஈரான் மீதான பொருளாதர தடை என்பது கூடுதல் எண்ணெய் விலைக்கும் அதனை பலவீனப்படுத்தவும் எளிதான வழியாகும்.

முதலீட்டாளர்கள் சிறிய தும்மலுக்கே விலை ஏற்ற இறக்கத்திற்கு காத்திருப்பவர்கள். அவர்களுக்கு பணம் போட்டு பணம் எடுக்க வேண்டும். காரணத்திற்கு இது கிடைத்துவிட்டது.

ஈரான் மீது தடைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவது உலகின் எண்ணெய் விநியோகத்தை சற்று குறைப்பதாக இருக்கும். OPEC இல் ஈரான் மூன்றாவது மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளது. மேலும், இது மார்ச் மாதத்தில் உலகின் எண்ணெய் உற்பத்தியில் 4% ஆக இருந்தது. ஈரான் மீதான எந்தவொரு தடையும் எண்ணெய் விநியோகத்தை இறுக்கமாக்குகிறது, இது தினசரி வினியோகத்தில் 500,000 பீப்பாய்கள் காணாமல் போகச்செய்யும். உங்களுக்கு தெரியும், ரஷ்யாவும் OPEC க்கும் உலக உற்பத்தியைக் குறைப்பதற்கான முயற்சியில் 2017 ன் ஆரம்பத்தில் இருந்து வெளியீட்டை குறைத்துள்ளன. உற்பத்தியில் இந்த கட்டுப்பாடு 2018 இறுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெட்டுக்கள் விநியோகத்தை குறைத்துவிட்டாலும், அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தியில் அதிகரிப்பு தாக்கத்தை ஈடுகட்ட முடிந்தது. ஆனால்..

தொடர்ச்சி அடுத்த கட்டுரையில்....